ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளரான திஷாந்த் யானிக் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள அவர், தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக உள்ளதாகவும் அதனால் தன்னுடன் 10 நாட்களாக உடன் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். (Rajasthan Royals)
மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் விதிமுறைப்படி 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்ளப் போவதாகவும் பிறகு இரண்டு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்தவுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இணைவதாக தெரிவித்துள்ளார். (Rajasthan Royals)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் முன்னாள் ராஜஸ்தான் ரஞ்சி அணியின் கேப்டனாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. (Rajasthan Royals)