சிஎஸ்கே வீரர்களுக்கு சென்னையில் பயிற்சியா? தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ள தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம்

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளதாக ஐபிஎல் நிர்வாக தலைவர் பட்டேல் தெரிவித்த நிலையில் அனைத்து அணிகளும் தங்களுக்கான பயிற்சியை தொடங்க தயாராகி வருகின்றன.

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சி மேற்கொள்ளும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்த விதிமுறைகளின்படி அனைத்து அணிகளும் ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் தான் ஐக்கிய அரபு அமீரகம் செல்லவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைத்து எங்கு பயிற்சியை மேற்கொள்வது என்று ஆராய்ந்து வந்த நிலையில் வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி வழங்கலாம் என்று தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு சென்னையில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் நிலையில் வீரர்களை காண ரசிகர்கள் மைதானம் வரக்கூடும் என்பதால் இது குறித்து பேச தமிழக அரசிடம் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையை தவிர்த்து திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் வீரர்களுக்கு பயிற்சி மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat