திக் திக் நிமிடங்கள்… இங்கிலாந்து அணி அபார வெற்றி..

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி கடுமையாகப் போராடி 7 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. 

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் அசார் அலி பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 219 ரன்கள் குவித்து 107 ரன்கள் பின்நிலையில் இரண்டாவது இன்னிங்சை நிறைவு செய்தது.

மூன்றாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சால் 169 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆட்டத்தின் தொடக்கத்திலேயே Rory Burns ஆட்டமிழந்தது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இருப்பினும் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட் மற்றும் டொமினிக் ஷிப்லி ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு தேவையான ரன்களை குவித்தனர். இருப்பினும் திடீரென்று விக்கெட்டுகள் சரிய, இங்கிலாந்து அணி 117 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் துல்லியமாகவும் வேகமாகவும் ரன்களை குவிக்க இங்கிலாந்து அணியின் ரன்கள் மளமளவென உயரத் தொடங்கின. இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் 75 ரன்களும் கிறிஸ் வோக்ஸ் 84 ரன்களும் குவித்தனர்.பாகிஸ்தான் அணி தரப்பில் யாசிர் ஷா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இப் போட்டியில் வென்றதன் மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. 


ஆட்டநாயகன் விருது : கிறிஸ் ஒக்ஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat