தூள் கிளப்பிய மெஸ்ஸி… கால் இறுதி போட்டிக்கு முன்னேறியது பார்சிலோனா

சாம்பியன்ஸ் லீக் தொடரின் ரவுண்டாஃப் 16 இரண்டாவது லெக் போட்டியில் பார்சிலோனா அணி 3 – 1 என்ற கணக்கில் நாப்போலி அணியை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஏற்கனவே முதல் லெக் போட்டியில் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்த இரு அணிகளும் இரண்டாவது லெக் போட்டியில் இன்று மோதின. ஆட்டத்தின் பத்தாவது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் லெங்க்ரேட் கோல் அடிக்க பார்சிலோனா அணி முன்னிலை பெற்றது.

இதைத்தொடர்ந்து லியோனல் மெஸ்ஸி கோல் அடிக்க பார்சிலோனா அணி 2 – 1 என்ற கணக்கில் போட்டியில் முன்னிலை வகித்தது. முதல் பாதி இறுதியில் இரு அணிகளுக்கும் பெனால்டி வாய்ப்பு கிடைக்க இரு அணிகளும் கோல் அடித்து முதல் பாதியை 3– 1 என்ற கணக்கில் நிறைவு செய்தது. இரண்டாவது பாதியில் எந்த அணிகளும் கோல் அடிக்காத காரணத்தினால் பார்சிலோனா அணி 3 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில், FC Bayern Munich அணி Chelsea அணியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது.

வரும் 15ஆம் தேதி நடக்கவுள்ள காலிறுதி போட்டியில் பார்சிலோனா அணி FC Bayern Munich அணியை எதிர்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat