சாம்பியன்ஸ் லீக் தொடரில் ரவுண்ட் of 16 இரண்டாவது கால் போட்டியில் ரியல் மேட்ரிட் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி அணி காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற முதல் லெக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் 9 ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் Striling முதல் கோல் அடிக்க மான்செஸ்டர் சிட்டி அணி மேலும் முன்னிலை பெற ஆரம்பித்தது. ஆனால் 28 ஆவது நிமிடத்தில் பேனஸிமா அடித்த கோல் ரியல் மேட்ரிட் அணிக்கு ஆறுதல் ஏற்படுத்தினாலும் 68 நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் ஜீசஸ் கோல் அடிக்க மான்செஸ்டர் சிட்டி அணி 2 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
முதல் மற்றும் இரண்டாவது லெக் ஆட்டங்கள் இணைந்து மான்செஸ்டர் சிட்டி அணி 4-2 என்ற கணக்கில் காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. காலிறுதிப் போட்டியில் லயன் அணியுடன் மான்செஸ்டர் சிட்டி அணி மோதுகிறது.