ரொனால்டோ போராட்டம் வீண்,சாம்பியன்ஸ் லீக் தொடரில் இருந்து வெளியேறியது ஜுவேண்டஸ் அணி

சாம்பியன்ஸ் லீக் தொடரின் ரவுண்ட் ஆப் 16 போட்டியின் இரண்டாவது லெக் போட்டியில் ஜுவேண்டஸ் அணி 2-1 என்ற கணக்கில் லியொன் அணியை வீழ்த்தினாலும் 2 – 2 என்ற அவே கோல் கணக்கில் லியொன் அணி காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

நேற்று நடைபெற்ற இரண்டாவது லெக் போட்டியில் ஆட்டத்தின் 12 ஆவது நிமிடத்தில் லியொன் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க Depay அதை கோலாக மாற்ற லியொன் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 

இருப்பினும் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று போராடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து இரு கோல்களை அடிக்க ஜுவேண்டஸ் அணி 2-1 என்ற கணக்கில் இப்போட்டியில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஒரு அவெ கோல் அடித்த காரணத்தினால் லியொன் அணி காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

லியொன் அணி காலிறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணியை எதிர்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat