மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 244 ரன்கள் முன்னிலை

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி மூன்றாவது இன்னிங்சில் 244 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகின்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் அசார் அலி டேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் அணி சார்பில் யாசிர் ஷா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 
இதையடுத்து 106 ரன்கள் முன்னிலையுடன் மூன்றாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 137 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. 


மூன்றாம் நாள் ஆட்டம் ஆய்வு:

பாகிஸ்தான் அணி:

இரண்டாம் நாள் ஆட்டத்தில் வெளிப்படுத்திய ஆக்ரோஷத்தை பாகிஸ்தான் அணி மூன்றாம் நாள் ஆட்டத்தில் கடைப்பிடிக்கவில்லை என்றே கூறலாம். மூன்றாம் நாள் ஆட்ட தொடக்கத்தில் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் இன்னிங்சில் கடைசியில் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்தது பாகிஸ்தான் அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவது இன்னிங்சில் பேட்டிங்கை பொருத்தவரை பாகிஸ்தான் அணி முழுவதுமாக சொதப்பியது என்றே கூறலாம்.


இங்கிலாந்து அணி:

பெரும் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த இங்கிலாந்து அணி மீண்டும் இப்போட்டியில் ஒரு நல்ல பாதைக்கு வந்தடைந்துள்ளது. இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங்கில் சொதப்பி இருந்தாலும் மூன்றாவது இன்னிங்சில் திறமையான பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து அணி மீண்டும் ஆட்டத்திற்குள் வந்துள்ளது. 

நான்காம் நாள் ஆட்டம் கணிப்பு:

பாகிஸ்தான் அணி:

மூன்றாவது இன்னிங்சில் இன்னும் இரண்டு விக்கெட்டுகள் கையில் உள்ள நிலையில் இங்கிலாந்து அணிக்கு 280+ ரன்கள் இலக்காக நிர்ணயிக்க பாகிஸ்தான் அணி நினைக்கும். இன்னும் இரண்டு நாட்கள் இப்போட்டியில் மிச்சம் இருப்பதால் இப்போட்டியின் வெற்றி அல்லது தோல்வி தீர்மானிக்கப்படும்.

இங்கிலாந்து அணி:

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை முதல் ஐந்து நிமிடத்திற்குள் மூன்றாவது இன்னிங்சை முடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இன்னும் இரண்டு நாட்கள் மிச்சம் இருப்பதால் இங்கிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இப்போட்டியில் வெல்ல வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat