பாகிஸ்தான் அணி நல்ல முன்னிலை |Eng vs Pak 1st Test Day 2 |

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 92 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் பின்னடைவுடன் விளையாடி வருகின்றது. (Eng vs Pak 1st Test Day 2)

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடந்து வருகின்றது டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் அசார் அலி பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 139 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. (Eng vs Pak 1st Test Day 2)

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சரியத் தொடங்கிய நிலையில் மறுமுனையில் ஷான் மசூத் சதமடிக்க பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷான் மசூத் 156 ரன்கள் அடித்தார். இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே பெரும் பின்னடைவாக அமைந்தது. 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தது இங்கிலாந்து அணி. இருப்பினும் ஆட்டத்தின் இறுதியில் ஜோடி சேர்ந்த போப் மற்றும் ஜோஸ் பட்லர் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணிக்கு 92 ரன்கள் சேர்த்தனர். (Eng vs Pak 1st Test Day 2)

இரண்டாம் நாள் ஆட்டம் ஆய்வு:

பாகிஸ்தான் அணி:

2 ஆம் நாளின் தொடக்கத்தில் பாபர் அசாம் விக்கெட்டை இழந்தாலும் ஷான் மசூத்தின் அதிரடி ஆட்டம் பாகிஸ்தான் அணியை ஒரு நல்ல இடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்துள்ளது. பந்துவீச்சில் பொருத்தவரை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் மிக விரைவாக மைதானத்தை பழகிக்கொண்டு பந்துகளை வீசியது இங்கிலாந்து அணிக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. (Eng vs Pak 1st Test Day 2)

இங்கிலாந்து அணி:

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை இரண்டாவது இன்னிங்சில் தொடக்கத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை சற்றும் சமாளிக்க இயலாமல் தடுமாறியது மிகுந்த கவலையில் ஏற்படுத்துகிறது. ஏற்கனவே ஒரு பேட்ஸ்மேன் இல்லாமல் ஆடுவது அணிக்கு சற்று பின்னடைவாக கருதப்பட்ட நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சு இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தலை சொரிய வைத்துள்ளது. (Eng vs Pak 1st Test Day 2)

மூன்றாம் நாள் ஆட்டம் கணிப்பு:

பாகிஸ்தான் அணி:

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இங்கிலாந்து அணியை பாலோ ஆன் ரன்களுக்குள் சுருட்டி, மீண்டும் பேட்டிங் செய்து நான்காவது இன்னிங்சில் பெரும் ரன்களை இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு இலக்காக தரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மேலும் இங்கிலாந்து அணி தரப்பில் பேட்ஸ்மேன்கள் பற்றாக்குறை இருப்பதால் பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றியை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது என்றே கூறலாம். (Eng vs Pak 1st Test Day 2)

இங்கிலாந்து அணி:

பென் ஸ்டோக்ஸ் பந்து வீச இயலாத காரணத்தினால் ஒரு பேட்ஸ்மேன் பற்றாக்குறையாக சென்ற இங்கிலாந்து அணி இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி வருகின்றது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் மற்றும் பாப் இருவரும் மிகப்பெரிய ரன்கள் குவித்தால் மட்டுமே இங்கிலாந்து அணியால் இப்போட்டியில் முன்னிலை பெற இயலும். (Eng vs Pak 1st Test Day 2)

வானிலை:

இன்றைய நாள் ஆட்டம் முழுவதும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேரம் : மாலை 3.30.

நேரலை தொலைக்காட்சி : Sony Six,  Sony Six HD

நடுவர்கள் : Richard Kettleborough, Richard Illingworth

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat