பாபர் அசாம் மற்றும் ஷான் மசூத் நிதான ஆட்டம் – Eng vs Pak 1st Test Day 1

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 139 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் அசார் அலி பேட்டிங்  செய்வதாக தீர்மானித்தார். ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணி நிதானமாக ரன்களை குவிக்க தொடங்கியது. இருப்பினும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிட் அலி 16 ரன்களுக்கும் கேப்டன் அசார் அலி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய பாபர் அசாம் 69 ரன்கள் குவிக்க மழை காரணமாக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 139 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகின்றது.: பாகிஸ்தான் அணியின் ஷான் மசூத் 46 ரன்களுடன் களத்தில் உள்ளார். (Eng vs Pak 1st Test Day 1)


முதல் நாள் ஆட்டம் ஆய்வு:

இங்கிலாந்து அணி:

சீரிய வரிசையில் விக்கெட்டுகளை எடுக்கத் தவறியது இங்கிலாந்து அணிக்கு பெரும் பிரச்சனையாக அமைந்துள்ளது. (Eng vs Pak 1st Test Day 1)


பாகிஸ்தான் அணி:

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை முதல் நாள் ஆட்டத்தில் இவ்வளவு நன்றாக விளையாடுவார்கள் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் கூட்டணியால் ஒரு விக்கெட்டுகள் கூட எடுக்க முடியாமல் செய்தது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பலமாக அமைந்தது. ஆட்டத்தில் நிதானமாக தொடங்கிய பாபர் அசாம் நேரம் செல்ல செல்ல ரன்கள் குவிப்பை வேகப்படுத்தியது இங்கிலாந்து அணிக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. (Eng vs Pak 1st Test Day 1)


இரண்டாம் நாள் கணிப்பு:

பாகிஸ்தான் அணி:

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இரண்டாம் நாள் ஆட்டத்திலும் இதுபோன்று நன்றாக விளையாடி 400 ரன்களுக்கு மேல் குவித்தால் இப்போட்டியில் தோல்வி அடைய வாய்ப்பு மிகவும் குறைவு. (Eng vs Pak 1st Test Day 1)


இங்கிலாந்து அணி:

இரண்டாம் நாள் தொடக்கத்திலேயே பாபர் அசாம் மற்றும் ஷான் மசூத் இவர்கள் இருவரின் விக்கெட்டுகளை கைப்பற்றுவது மிகவும் முக்கியமாகும். பாகிஸ்தான் அணியை 300 ரன்களுக்கு சுருட்டினால் மட்டுமே இங்கிலாந்து அணியால் இப் போட்டியில் வெல்ல முடியும். (Eng vs Pak 1st Test Day 1)

நேரம் : மாலை 3.30.

நேரலை தொலைக்காட்சி : Sony Six,  Sony Six HD

நடுவர்கள் : Richard Kettleborough, Richard Illingworth

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat