அமெரிக்காவில் இந்த மாதம் 31ம் தேதி தொடங்க உள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஊட்டியில் இருந்து விலகுவதாக நடப்பு சாம்பியனான ரபேல் நடால் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் இந்த ஆண்டு அமெரிக்காவில் நடக்க உள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாகவும், இந்த முடிவைப் பல தடவை யோசித்த பின்னரே முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பல மாதங்கள் கழித்து டென்னிஸ் போட்டிகளை மீண்டும் விளையாட கொண்டுவந்த உலக டென்னிஸ் கழகத்திற்கு நன்றி எனவும் இத் தொடரில் பங்கேற்கும் வீரர்களை வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் போட்டி ஜூன் மாதத்தில் தொடங்க இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மேலும் பல வீரர்கள் அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.