பெரும் நஷ்டத்தை சந்திக்க காத்திருக்கும் ஐபிஎல் அணி நிர்வாகங்கள்

இந்த வருடத்திற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி தொடங்க உள்ளது என்ற செய்தி வெளிவந்தவுடன் பல்வேறு அணி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று செய்தி வெளியானவுடன் ரசிகர்கள் மற்றும் அணி நிர்வாகங்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளன.

குறிப்பாக ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட்டால் ஒவ்வொரு அணியும் தனக்கென ஒரு ஓட்டல் உடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும். இதன் மூலம் வீரர்கள் தங்குவதற்கு மற்றும் உணவு செலவு ஆகியவை பாதியாக குறையும். ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படுவதால் வீரர்களின் தங்கும் செலவு இரட்டிப்பு ஆகும் என்று கருதப்படுகின்றது. 

இத்தோடு மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டி நடப்பது அணி நிர்வாகத்திற்கு பெரும் நஷ்டமாக பார்க்கப்படுகின்றது. ரசிகர்களுடன் ஐபிஎல் போட்டி நடக்கும் பொழுது மைதானத்தில் கிடைக்கும் டிக்கெட்டுக்கான பணம் அணிகளுக்கும் வழங்கப்படும். ஆனால் இம்முறை ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெறுவதால் ஐபிஎல் அணிகளுக்கு பெரும் நஷ்டத்தை உண்டாக்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனம் இருக்க வேண்டுமா என்று விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் விவோ நிறுவனம் தாமாக ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு விவோ நிறுவனம் விலகினால் அணிகளுக்கு மீண்டும் நஷ்டத்தை உண்டாக்க வாய்ப்புள்ளது. கடைசி கட்டத்தில் புதிய ஸ்பான்சர் நிறுவனத்தை பிடித்தாலும் விவோ நிறுவனம் அளவிற்கு புதிய ஸ்பான்சர்கள் ஏலம் எடுப்பார்களா என்பது சந்தேகம். இவ்வாறு பல்வேறு கட்ட நெருக்கடியுடன் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat