இங்கிலாந்து மண்ணில் சாதிக்குமா பாகிஸ்தான் – டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மான்சிஸ்டர் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 

கடந்த மாதம் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து வந்து மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து 29 வீரர்களைக் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது எனினும் பாகிஸ்தான் அணியில் 7 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் இதோட நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும் அந்த ஏழு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு விரைவில் குணம் அடைந்ததால் அனைத்து 29 வீரர்களும் இங்கிலாந்து வந்தடைந்தனர். கடந்த ஒரு மாதங்களாக இங்கிலாந்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்களுக்குள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வந்தனர். இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணி தயாராகி உள்ளது.

மற்ற நாடுகளை காட்டிலும் இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் அணியின் கடந்த ஆட்டங்கள் நன்றாகவே அமைந்துள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு சற்று தலைவலியாக இருக்கும்.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை வென்றாலும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் சற்று சவாலாகவே இருக்கும். பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆன நசீம் ஷா, ஷஹீன் அஃப்ரிடி மற்றும் முகமது அப்பாஸ் ஆகியோரின் பந்துவீச்சை பலமாக இருப்பதால் இங்கிலாந்து அணி மிகவும் கவனமாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


அணி விவரம்:

இங்கிலாந்து அணி:

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அணியே இப்போட்டியில் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரை எந்த வித மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகின்றது.

England Squad: Rory Burns, Dominic Sibley, Zak Crawley, Joe Root(c), Ben Stokes, Ollie Pope, Jos Buttler(w), Dominic Bess, Jofra Archer, Stuart Broad, James Anderson, Chris Woakes, Mark Wood, Sam Curran

பாகிஸ்தான் அணி:

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை பந்துவீச்சு நசீம் சா, சாயின் அப்ரிடி, முகமது அப்பாஸ் மற்றும் யாசிர் ஷா ஆகியோர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. விக்கெட் கீப்பர் பொருத்தவரை இளம் வீரரான ரிஸ்வானுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது முன்னாள் கேப்டன் சப்ராஸ் அகமது வாய்ப்பு வழங்கப்படுமா என்ற குழப்பம் இருக்கின்றது. தொடக்க வீரர்களைப் பொறுத்தவரை அபிட் அலி மற்றும் ஷான் மசூத் ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளது.

Pakistan Squad: Shan Masood, Abid Ali, Azhar Ali(c), Babar Azam, Asad Shafiq, Mohammad Rizwan(w), Shadab Khan, Yasir Shah, Mohammad Abbas, Shaheen Afridi, Naseem Shah, Fawad Alam, Sohail Khan, Sarfaraz Ahmed, Imam-ul-Haq, Kashif Bhatti


வானிலை மற்றும் மைதானம் :

முதல் நாள் ஆட்டத்தில் சற்று மழை குறுக்கிட வாய்ப்புள்ளது. மைதானத்தை பொருத்தவரை முதல் நாளிலிருந்து சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் என்பதால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங் செய்யவே தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நேரம் : மாலை 3.30.

நேரலை தொலைக்காட்சி : Sony Six,  Sony Six HD

நடுவர்கள் : Richard Kettleborough, Richard Illingworth

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat