ருத்ரதாண்டவம் ஆடிய அயர்லாந்து அணி – இங்கிலாந்து அணி அதிர்ச்சி தோல்வி

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. 328 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய அயர்லாந்து அணி 49.5 வது ஓவரில் 3  விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 

டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் Balberine பந்து வீசுவதாக தீர்மானித்தார். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கூட்டணி சேர்ந்த கேப்டன் மார்கன் மற்றும் டாம் பென்டன் இருவரும் அணியின் ரன்களை மளமளவென உயர்த்தினர். கேப்டன் மார்கன் ஒருநாள் போட்டியில் தனது 14 ஆவது சதத்தை பதிவு செய்தார். ஆட்டத்தின் இறுதியில் டேவிட் வில்லி 51 ரன்கள் குவிக்க இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் 328 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.


இதையடுத்து 329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி தொடக்கம் முதலே தனது ஆதிக்கத்தைச் செலுத்தியது. இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களின் பந்தை நாலாபுறமும் சிதறடித்த Stirling மற்றும் பல்பிரின் இருவரும் தங்கள் பங்கிற்கு சதத்தை விளாசினார். இறுதியில் அயர்லாந்து அணி 329 ரன்களை குவித்து வெற்றி இலக்கை எட்டியது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக Stirling 142 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.


மூன்றாவது ஒருநாள் போட்டி ஆய்வு:

இங்கிலாந்து அணி:

பேட்டிங்கில் மிகவும் நன்றாக விளையாடிய இங்கிலாந்து அணி பந்துவீச்சில் மிகப் பெரிய சொதப்பல்ஐ கண்டது. டேவிட் வில்லி மற்றும் அடில் ரஷித் ஆகிய மூத்த வீரர்கள் அணியில் இருந்தும் பந்துவீச்சில் சொதப்பியது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. 

அயர்லாந்து அணி:

கடந்த இது ஒரு நாள் போட்டியில் செய்த தவறை அயர்லாந்து அணி மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெகுவாக திருத்தி உள்ளது. பால் ஸ்டெர்லிங் மற்றும் கேப்டன் பால்பரின் ஆகியோரின் திறமையான ஆட்டமே அயர்லாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது. உலகச் சாம்பியனான இங்கிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் அயர்லாந்து அணி சற்று நம்பிக்கையை பெற்றுள்ளது.


ஆட்டநாயகன் விருது: பால் ஸ்டெர்லிங்

தொடர் நாயகன் விருது: டேவிட் வில்லி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat