ஆறுதல் வெற்றி பெறுமா அயர்லாந்து அணி – மூன்றாவது ஒருநாள் போட்டி அலசல்

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஏற்கனவே 2 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்று உள்ளதால், கடைசி ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி ஆறுதல் வெற்றி பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


அணி விவரம்:

அயர்லாந்து அணி:

அயர்லாந்து அணியை பொறுத்தவரை அந்த அணியின் ஆல்ரவுண்டர் Campher மட்டுமே நன்றாக விளையாடி வருகின்றார். அணிக்கு தேவையான சமயத்தில் ரன்களும் விக்கெட்டுகளையும் எடுத்துக் கொடுக்கும் அவர் இங்கிலாந்து அணிக்கு சற்று தலைவலியாக இருப்பார். அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் வில்லியம் போட்டர்ப்பியில்ட் காயம் காரணமாக முதல் 2 ஒருநாள் போட்டியில் விளையாடாமல் இருந்தார். இருப்பினும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. கடைசி ஒருநாள் போட்டி என்பதால் அயர்லாந்து அணி புது வீரர்களை அணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளது.

Squad: Andrew Balbirnie (c), Paul Stirling, Curtis Campher, Gareth Delany, Josh Little, Andrew McBrine, Barry McCarthy, Kevin O’Brien, William Porterfield, Boyd Rankin, Simi Singh, Harry Tector, Lorcan Tucker, Craig Young


இங்கிலாந்து அணி:

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை தொடரை கைப்பற்றியதால் சற்று தலைவலி குறையும். இருப்பினும் சில வீரர்கள் குறிப்பாக டாம் பேட்டன் மற்றும் ஜேசன் ராய் ஆகியோர் கடந்த இரு போட்டிகளில் சரியாக விளையாடாததால் அவர்களை நீக்கி ஒரு வீரர்களுக்கு வாய்ப்பு தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை அணியில் பெரும் மாற்றம் இருக்காது என்று கருதப்படுகிறது.

Squad: Eoin Morgan (Captain), Moeen Ali, Jonny Bairstow, Tom Banton, Sam Billings, Tom Curran, Liam Dawson, Livingston, Saqib Mahmood, Adil Rashid, Jason Roy, Reece Topley, James Vince, David Willey

வானிலை மற்றும் மைதானம்:

இன்றைய ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்பில்லை. கடைசி ஒருநாள் போட்டி என்பதால் டாஸ் வெல்லும் அணி தாங்கள் எதில் பலவீனமாக இருக்கிறோமோ அதை தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நேரம் : மாலை 6.30

நேரடி ஒளிபரப்பு : Sony Six, Sony Six HD

நடுவர்கள் : Matin Saggers and David Millins

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat