ஆஸ்திரேலியா – மேற்கிந்திய தீவுகள் தொடர் ரத்து செய்வதாக அறிவிப்பு

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்வதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக 2022 ஆம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் டி20 உலகக் கோப்பை பயிற்சிக்காக மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா அணிகள் முன்னதாக டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் விளையாட இருந்த போட்டியும் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செப்டம்பர் மாதத்தில் கரிபியன் பிரீமியர் லீக் தொடரும் அக்டோபர் மாதத்தில் இந்திய பிரீமியர் லீக் தொடரும் நடைபெற இருப்பதால் இத் தொடர் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat