ரசிகர்கள் இல்லாமல் தான் ஐபிஎல் போட்டி – சவுரவ் கங்குலி திட்டவட்டம்|IPL|

இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் மைதானத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று தகவல் வெளியான நிலையில் எந்த ஒரு போட்டிக்கும் ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். |IPL|

நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆய்வுக் கூட்டத்தில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு தேவையான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் பல்வேறு முடிவுகளை அனைத்து அணி நிர்வாகத்திடமும் ஆலோசித்து ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய தலைவர் உஸ்மான் தெரிவிக்கையில், ஐபிஎல் போட்டிகளை காண 30%முதல் 50% வரை ரசிகர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். |IPL|

ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐபிஎல் நிர்வாகம், வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருப்பதால் போட்டியை காண ரசிகர்களே அனுமதிப்பது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எந்த போட்டிக்கும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |IPL|

மேலும் இது குறித்து அணி நிர்வாகத்திடம் கூறுகையில், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை காண ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் அதில் ஏற்படும் நஷ்டத்தை அணி நிர்வாகம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. |IPL|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat