எந்த வீரரை கழட்டிவிட போகின்றது சென்னை அணி….|CSK|

இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிக்கு ஒவ்வொரு அணியும் 24 வீரர்களுடன் மட்டுமே ஐக்கிய அரபு அமீரகம் செல்ல இயலும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 25 வீரர்களை ஏலத்தில் எடுக்க இயலும். |CSK|

இந்த அறிவிப்பு காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் தங்களின் ஒரு வீரர்களை இந்தியாவிலேயே விட்டுவிட்டு ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த வீரரை கழற்றி விட போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.  |CSK|

சென்னை அணியில் குறைந்தபட்சமாக ஆறு சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் இவர்களில் எவரேனும் ஒருவரை சென்னை அணி கழட்டிவிட வாய்ப்புள்ளது. கரண் ஷர்மா அல்லது சாய் கிஷோர் ஆகியோர் நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
இன்னொரு பக்கம் ஐக்கிய அரபு அமீரக மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு உதவாது என்பதால் ஏதேனும் ஒரு வேகப்பந்து வீச்சாளரை நீக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்தப் பட்டியலில் மோனு குமார் அல்லது ஆசிப் ஆகியோர் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. |CSK|

ஆனால் இதுபோன்ற நீக்கங்கள் எப்பொழுது தேவைப்படும் என்றால் அணியில் உள்ள 25 வீரர்களும் ஐபிஎல் போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்தால் மட்டுமே. வெளிநாட்டு வீரர்களை பொருத்தவரை அந்த அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதித்தால் மட்டுமே அவர்களால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட இயலும். மேலும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர் தனது காயத்திலிருந்து மீண்டு வருவதால் அவரால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. |CSK|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat