பெண்கள் ஐபிஎல் தொடர் நடந்தே தீரும் – சௌரவ் கங்குலி திட்டவட்டம்|WIPL|

இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடருடன் பெண்கள் ஐபிஎல் டி20 தொடரும் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். |WIPL|

கடந்த ஆண்டு சோதனை முயற்சியாக நடத்தப்பட்ட மூன்று அணிகளை கொண்ட மகளிர் போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டும் மகளிர் ஐபிஎல் தொடரை நான்கு அணிகளுடன் நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு மகளிர் ஐபிஎல் தொடர் நடத்துவது தாமதமானது. |WIPL|

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளதால் மகளிர் டி20 போட்டி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சௌரவ் கங்குலி, நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இத்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. |WIPL|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat