படுதோல்வி அடைந்தது ஜுவேண்டஸ் அணி… இன்டர் மிலான் வெற்றி…

நேற்று நடைபெற்ற Serie A தொடரின் கடைசி வார போட்டியில் ஜுவேண்டஸ் அணியை 1-3 என்ற கணக்கில் வீழ்த்தியது ரோமா அணி. 

இந்த ஆண்டிற்கான Serie A கோப்பையை வென்ற ஜுவேண்டஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ரோமா அணியை எதிர்கொண்டது. அடுத்த வாரம் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஜுவேண்டஸ் அணி லியொன் அணியை எதிர்கொள்ள உள்ளதால் இந்த போட்டியில் ரொனால்டோ மற்றும் டயபல ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. 

ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் ஜுவேண்டஸ் அணி கோல் அடித்தாலும் ரோமா அணி தனது முழு ஆதிக்கத்தைச் செலுத்தியது. ஆட்டத்தின் இறுதியில் ஜுவேண்டஸ் அணியை 1-3 என்ற கணக்கில் வீழ்த்தியது. இப்போட்டி நிறைவடைந்தவுடன் இந்த ஆண்டிற்கான Serie A கோப்பை ஜுவேண்டஸ் அணிக்கு வழங்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் இன்டர்மிலான் அணி அட்லாண்டா அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. 
அடுத்த சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு ஜுவேண்டஸ், இன்டர் மிலான், அட்லாண்டா மற்றும் லஜியோ அணிகள் Serie A தொடரிலிருந்து தகுதி பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat