ஐபிஎல் போட்டிக்கான விதிமுறைகள் அறிவிப்பு…

இன்று நடைபெற்ற ஐபிஎல் நிர்வாகக் கூட்டத்தில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி நிறைவடைகின்றது.

கூட்டத்தில் முடிவெடுத்த விதிமுறைகளை காண்போம்:

1. மைதானம் : இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மூன்று சர்வதேச மைதானத்தில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

2. நேரம்: ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்கும் என்றும் மேலும் இந்த தொடரில் 10 double Header நடைபெறும் என்றும் இதில் முதல் போட்டியில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3. அணி விவரம்: ஒவ்வொரு அணியும் பயிற்சி வீரர்கள் மற்றும் மாற்று வீரர்கள் உட்பட 24 வீரர்கள் மட்டுமே ஐக்கிய அரபு அமீரகம் அழைத்துச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

4. ஸ்பான்சர்ஷிப்: இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு விவோ நிர்வாகமே ஸ்பான்சராக இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

5. விதிமுறைகள்: ஒவ்வொரு அணிக்கும் தனிப்பட்ட முறையில் விதிமுறைகள் வழங்கப்படும் என்றும் அதை அவர்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat