இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது இங்கிலாந்து அணி.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி சௌதாம்ப்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் Balbarine பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். இருப்பினும் முதல் ஒருநாள் போட்டியைப் போலவே அயர்லாந்து அணி தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை விட ஆரம்பித்தது. 27 ஓவர்களில் 96 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் Campher மற்றும் சிமி சிங் இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக: Campher 68 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு இன்னிங்சில் மூன்றாவது பந்திலேயே ஜேசன் ராய் ஆட்டமிழந்தது பெரும் பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் பொறுப்புடன் ஆடிய ஜானி பேர்ஸ்டோ அயர்லாந்து பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடிக்க இங்கிலாந்து அணி 32 ஓவர்களில் 216 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோ 41 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார்.
இரண்டாவது ஒருநாள் போட்டி ஆய்வு :
அயர்லாந்து அணி:
அயர்லாந்து அணியை பொறுத்தவரை அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரன் குவிக்க தவறுவது அயர்லாந்து அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இப்போட்டியில் அயர்லாந்து அணி 250 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தால் இப்போட்டியின் முடிவு மாற்றம் கண்டிருக்கக் கூடும். அயர்லாந்து பந்துவீச்சை பொறுத்தவரை அனைவரும் நன்றாக பந்து வீசினாலும் இங்கிலாந்து அணியின் வெற்றி இலக்கு குறைவு என்பதால் அனைத்தும் பலனளிக்காமல் சென்றுவிட்டது.
இங்கிலாந்து அணி:
எதிர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை எளிதில் வீழ்த்தினாலும் பின்னர் விக்கெட்டுகளை எடுக்க இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர்கள் தடுமாறுகின்றனர். மேலும் பேட்டிங்கில் பொருத்தவரை பல வீரர்கள் பார்முக்கு வருவது முக்கியமாகிறது. குறிப்பாக ஜேசன் ராய் உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழப்பது அணியை தடுமாற செய்ய வாய்ப்புள்ளது.
ஆட்டநாயகன் விருது :
49 பந்துகளில் 82 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.