கோப்பையை உயர்த்தியது ஆர்சனல் அணி… |FA Cup|

FA கோப்பை இறுதிப்போட்டியில் செல்சி அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி 14 ஆவது முறையாக FA Cup சாம்பியனாக முடிசூடியது ஆர்சனல் அணி. |FA Cup|

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் செல்சி அணியின் கிறிஸ்டியன் கோல் அடிக்க செல்சி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இருப்பினும் மனம் தளராத ஆர்சனல் அணிக்கு 28 ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, ஆர்சனல் அணியின் கேப்டன் Aubameyang அதை கோலாக மாற்றினார். இந்நிலையில் முதல்பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. |FA Cup|

இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய ஆர்சனல் அணி 67 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடிக்க ஆர்சனல் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் FA Cup வரலாற்றில் 14 முறை கோப்பையை வென்று சாதனையும் பூர்த்தி செய்தது ஆர்சனல் அணி. |FA Cup|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat