விடைபெற்றார் சென்னையின் எப்சி தலைமை பயிற்சியாளர்… ரசிகர்கள் கவலை..

சென்னையின் எப்சி  யின் பயிற்சியாளரான எவன் காயில் ஜம்சேத்பூர் எப்சி அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தச் செய்தி சென்னையின் எப்சி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஆறாவது சீசனின் முதல் பாதியில் சென்னையின் எப்சி அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து வந்தது. இந்நிலையில் சென்னையின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட எவன் காயில் சென்னையின் எஃப்சி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று இறுதிப்போட்டி வரை முன்னேற வைத்தார். 
அதனால் இந்த ஆண்டும்  சென்னையின் எப்சி அணி எவன் காயிலை பயிற்சியாளராக நீட்டிப்பர் என்று எதிர்பார்க்கப்பட்டது. இன்னிலையில் எவன் காயில் ஜாம்ஷெட்பூர் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி சென்னையின் எப்சி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் எவன் காயில் தனக்கு வேண்டிய வீரர்களை ஜம்சேத்பூர் அணிக்கு அழைத்துச் செல்லப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat