ரசிகர்களுடன் ஐபிஎல் போட்டியா.. ஐபிஎல் நிர்வாகம் ஆலோசனை (IPL News)

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் 30- 50% ரசிகர்களை போட்டிக்கான அனுமதிக்கலாம் என்று ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (IPL News)

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய தலைவர் உஸ்மான், வரும் செப்டம்பர் மாதம் துபாய் ஆகிய மாநகரில் கொரோனா பாதிப்பு குறைய வாய்ப்பு உள்ளதால் குறைந்த அளவுக்கு மைதானத்தில் ரசிகர்களை அனுமதிக்கலாம் என்ற திட்டம் உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இது குறித்து ஐபிஎல் நிர்வாகத்திடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். (IPL News)

இங்கிலாந்து நாட்டில் கவுண்டி போட்டிகள் ரசிகர்களுடன் தொடங்கின ஆனால் கொரோனா பாதிப்பு உயர தொடங்கியதால் மீண்டும் ரசிகர்களை மைதானத்தில் அனுமதிக்க முடியாது என்று இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற விஷயங்களையும் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் கருத்தில் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. (IPL News)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat