தொடரை வெல்லுமா இங்கிலாந்து அணி… இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகின்றது

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகின்றது. முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்நிலையில் இத்தொடரில் உடன் உலகக் கோப்பை சூப்பர் லீக் போட்டியும் நடைபெறுவதால் இப்போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அணி விவரம் :

இங்கிலாந்து அணி:

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய வீரர்களை இப் போட்டியில் விளையாடுவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து கேப்டன் மோர்கன், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதே எங்கள் நோக்கம் எனவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் தங்களை அணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியில் ஜோ டின்லி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார் என்றும் அணியில் லிவிங்ஸ்டன் இணைக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Squad: Eoin Morgan (Captain), Moeen Ali, Jonny Bairstow, Tom Banton, Sam Billings, Tom Curran, Liam Dawson, Livingston, Saqib Mahmood, Adil Rashid, Jason Roy, Reece Topley, James Vince, David Willey

அயர்லாந்து அணி:

அயர்லாந்து அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் அந்த அணியின் நட்சத்திர வீரரான வில்லியம் போர்ட்டர்பீல்ட் இல்லாதது பெரும் பின்னடைவாக அமைந்திருந்தது. இருப்பினும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பந்துவீச்சாளர்களை பொருத்தவரை முதல் ஒருநாள் போட்டியில் தங்களது நல்ல பங்கை வெளிப்படுத்தியதால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Squad: Andrew Balbirnie (c), Paul Stirling, Curtis Campher, Gareth Delany, Josh Little, Andrew McBrine, Barry McCarthy, Kevin O’Brien, William Porterfield, Boyd Rankin, Simi Singh, Harry Tector, Lorcan Tucker, Craig Young


வானிலை மற்றும் மைதானம்: இன்றைய போட்டியில் மழைக்கான வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்ய மைதானம் கடினமாக இருந்ததால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானிக்கும் என்று கருதலாம்.

நேரம் : மாலை 6.30

நேரடி ஒளிபரப்பு : Sony Six, Sony Six HD

நடுவர்கள் : Alex and David Millins

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat