இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் பந்து வீசுவதாக தீர்மானித்தார். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அயர்லாந்து அணி வீரர்களின் விக்கெட்டுகள் மளமளவென சரிய தொடங்கின.6 ஓவர்களில் 28 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து அயர்லாந்து அணி தடுமாறியது. இருப்பினும் Curtis மற்றும் Andy Mcbrine ஆகியோரின் கடைசிநேர ரன் குவிப்பால் அயர்லாந்து அணி 45-வது ஓவரில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் டேவிட் வில்லி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 28 ஓவர்களில் 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வீழ்த்தியது. இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக சாம் பில்லிங்ஸ் 67 ரன்கள் குவித்தார். இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது
முதல் ஒருநாள் போட்டி ஆய்வு
அயர்லாந்து அணி:
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அணியின் பாதி விக்கெட்டுகளை இழந்தது அயர்லாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. குறிப்பாக கேப்டன் Balbrine ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணியின் வெற்றியை எளிதாக்கியது. பந்துவீச்சை பொறுத்தவரை இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விக்கெட்டுகளை முன்பே எடுத்திருந்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்ற தவறியது அணியின் தோல்விக்கு வித்திட்டது. முதலாம் ஒருநாள் போட்டியில் செய்த தவறை திருத்தி இரண்டாம் ஒருநாள் போட்டிக்கு அயர்லாந்து அணி வீரர்கள் மீண்டு வருவர் என்று எதிர்பார்க்கலாம்.
இங்கிலாந்து அணி:
இங்கிலாந்து அணி முதல் ஒருநாள் போட்டியில் அனைத்து துறையிலும் மிகவும் நன்றாகவே செயல்பட்டது. குறிப்பாக பல நாள் கழித்து அணியில் இணைந்த டேவிட் வில்லி, முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது இங்கிலாந்து அணியில் நிரந்தரமாக அவரின் இடத்தை பிடிக்க உறுதுணையாக இருக்கும். இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை பொருத்தவரை இங்கிலாந்து அணியின் தூண்களாக இருக்கும் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் மீண்டும் Formக்கு வருவது அத்தியாவசியமாகிறது.
ஆட்ட நாயகன் விருது : டேவிட் வில்லி (விக்கெட்டுகள்)