ஐபிஎல் இறுதிப் போட்டியின் தேதி நவம்பர் எட்டாம் தேதியில் இருந்து நவம்பர் 10ஆம் தேதிக்கு மாற்ற படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் தொலைக்காட்சி நிறுவனங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். (IPL)
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கும் என்று ஐபிஎல் நிர்வாக தலைவர் படேல் தெரிவித்திருந்தார். மேலும் ஐபிஎல் இறுதிப் போட்டி நவம்பர் எட்டாம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீபாவளி வாதத்தில் இறுதிப் போட்டியை நடைபெற்றால் பார்வையாளர்கள் தொலைக்காட்சியில் போட்டிகளை பார்ப்பவர்கள் அதிகமாக இருக்கும் என்பதால் ஐபிஎல் இறுதிப் போட்டி தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. (IPL)
மேலும் இந்திய அணி ஐபிஎல் தொடரை முடித்துக்கொண்டு நேரடியாக ஆஸ்திரேலியா செல்ல வேண்டியுள்ளதால் தேதி மாற்றியமைப்பது தேவையாகின்றது. இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. (IPL)