இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து இடையேயான ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகின்றது – ஒரு அலசல்

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இன்று தொடங்க உள்ளது.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கடந்த 28ஆம் தேதி நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டிகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இங்கிலாந்து அணி வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் விளையாடி எந்த வீரரும் ஒரு நாள் போட்டி அணியில் இடம்பெறவில்லை. கடந்த 15 நாட்களாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் பயிற்சியை மேற்கொண்டு வந்தன. இந்நிலையில் கேப்டன் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆண்ட்ரூ பல்பிரின் தலைமையிலான அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

அணி விவரம் :

இங்கிலாந்து அணி:

இங்கிலாந்து அணியில் பல்வேறு மூத்த வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்ததால் ஒருநாள் தொடருக்கு இளம் வீரர்கள் உடனே களமிறங்குகிறது இங்கிலாந்து ஒருநாள் அணி. கேப்டன் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் இருப்பது பலமாகவே அமைந்துள்ளது. மேலும் பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் தங்களது திறமையை வெளிப்படுத்த அனைவரும் போராடுவர் என்று எதிர்பார்க்கலாம். வேகப்பந்து வீச்சாளர்களை பொருத்த வரை டேவிட் வில்லி மீண்டும் அணியில் இணைந்தது இங்கிலாந்து அணிக்கு பலமாகவே பார்க்கப்படுகின்றது.

Squad: Eoin Morgan (Captain), Moeen Ali, Jonny Bairstow, Tom Banton, Sam Billings, Tom Curran, Liam Dawson, Joe Denly, Saqib Mahmood, Adil Rashid, Jason Roy, Reece Topley, James Vince, David Willey

அயர்லாந்து அணி :

அயர்லாந்து அணியை பொறுத்தவரை அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் மார்க் அடைர் காயம் காரணமாக விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அணியின் ஆல் ரவுண்டர் சிமி சிங் ஏழாவது இடத்தில் களமிறங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருடன் கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக் தொடர் நடைபெறுவதால் 2023 உலக கோப்பைக்கு தகுதி பெற வேண்டுமெனில் அயர்லாந்து அணி புள்ளி பட்டியலில் நல்ல இடத்தில் இருப்பது கட்டாயம் ஆகிறது.

Squad: Andrew Balbirnie (c), Paul Stirling, Curtis Campher, Gareth Delany, Josh Little, Andrew McBrine, Barry McCarthy, Kevin O’Brien, William Porterfield, Boyd Rankin, Simi Singh, Harry Tector, Lorcan Tucker, Craig Young

வானிலை மற்றும் மைதானம்:

இன்றைய ஆட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. மைதானத்தை பொருத்தவரை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே அமைக்கப்பட்டுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் ரன் மழை பொழிய வாய்ப்புள்ளது.

நேரம் : மாலை 6.30

நேரடி ஒளிபரப்பு : Sony Six, Sony Six HD

நடுவர்கள் : Alex and Mike Burns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat