சென்னையின் எஃப்சி தொடர்ந்து ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்கும் – சென்னையின் எப்சி நிர்வாகம்

சென்னையின் எப்சி அணி தொடர்ந்து ஐஎஸ்எல் போட்டிகளில் பங்கேற்கும் என்றும் எந்த அணி களுடனும் சேர வாய்ப்பில்லை என்றும் சென்னையின் எப்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னையின் எப்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக சென்னையின் எஃப்சி அணி வேறு ஒரு அணியுடன் இணைந்து விளையாட உள்ளது என்ற தகவல் பரவுகின்றது, இந்த தகவலை மறுப்பதாகவும் சென்னையின் எஃப்சி அணி வரும் ஐஎஸ்எல் சீசனில் விளையாடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையின் எப்சி அணியின் நட்சத்திர வீரர் ஜெர்ரியின் ஒப்பந்தம் பல ஆண்டுகளுக்கு கையெழுத்திடப்பட்டுள்ளது என்ற செய்தியையும் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையின் எஃப்சி அணி சென்னை சிட்டி அணியுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் சென்னையின் எப்சி நிர்வாகம் எந்த ஒரு புது வீரர்களையும் கையெழுத்து இடாமலும் ஏற்கனவே இருந்த வீரர்களின் ஒப்பந்தத்தை நீடிக்காமல் இருந்தது. இதனால் இந்த ஆண்டு ஐஎஸ்எல் போட்டிகளில் சென்னையின் எஃப்சி அணி பங்கேற்குமா என்ற ஐயம் ரசிகர்களிடையே தோன்றியது. இதுகுறித்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினால் சென்னையின் எப்சி ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat