ஸ்டூவர்ட் பிராட் ஒரு பெரிய சாதனையாளர் – யுவராஜ் சிங் புகழாரம்

ஸ்டூவர்ட் பிராட் ஒரு பெரிய சாதனையாளன் என்றும் அவருக்கு நான் தலைவணங்குகிறேன் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் பகிர்ந்த ட்விட்டர் பதிவில்,” நான் ஒவ்வொரு முறையும் ஸ்டூவர்ட் பிராட் ஐ பற்றி எழுதும்பொழுது அனைவரும் நான் அடித்த 6 சிக்சர்கள் பற்றியே பேசுவர் ஆனால் இன்று ஸ்டூவர்ட் பிராட் இவ்வளவு பெரிய சாதனை படைத்து இருப்பதை நினைத்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்துவது எளிதான விஷயம் இல்லை என்றும் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி இருந்தால் மட்டுமே இத்தகைய சாதனை படைக்க இயலும் என்றும் ஸ்டூவர்ட் பிராட்ஐ பாராட்டி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat