அசுர பலம் பெறும் மும்பை சிட்டி FC அணி… தடுமாறும் கோவா அணி…

கடந்த சில நாட்களாக பல்வேறு வீரர்களை தங்களது அணியில் வாங்கி குவிக்கும் மும்பை சிட்டி கால்பந்து அணி அப்போது கோவா அணியின் சிறந்த வீரனான Hugo Bumous அவர்களையும் 1.6 கோடி செலவில் மும்பை சிட்டி எஃப்சி வாங்கியுள்ளது.

பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் தலைசிறந்த அணியான மான்செஸ்டர் சிட்டி அணி கடந்த ஆண்டு மும்பை சிட்டி அணியின் பங்குகளை வாங்கியது. இந்த ஒப்பந்தம் இந்திய கால்பந்து துறைக்கு பெரும் மைல் கல்லாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து பல்வேறு சிறந்த வீரர்களை தங்களது அணியில் இணைத்து வந்தது மும்பை சிட்டி எப்சி. கடந்த சீசனில் கோவா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த Sergio Labera அவர்களை தங்களது அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்தது மும்பை சிட்டி எப்சி. மேலும் கோவா அணியின் சிறந்த வீரர்களான மந்தார் தேசாய், Fall, அஹமத் ஜெஹோ உள்ளிட்ட வீரர்களை தங்களது அணிக்கு இழுத்தது மும்பை சிட்டி எப்சி அணி.

இதைத்தொடர்ந்து கடந்த சீசனில் தங்கப் பந்து விருது வென்ற Hugo Bumous அவர்களை “Buyout Clause” முறையில் 1.6 கோடிக்கு வாங்கியது மும்பை சிட்டி எஃப்சி அணி. இதுவே இந்திய கால்பந்து வரலாற்றில் அதிகபட்ச ஏலம் ஆகும்.

இதுபோன்ற பல்வேறு தலைசிறந்த வீரர்களை இழந்து வரும் கோவா அணி இந்த ஆண்டு ஆசிய சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat