கடந்த இரண்டு ஆண்டுகளாக கிஸ் தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட மறுத்து வந்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 20 வீரர்கள் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள்ளனா வஹாப் ரியாஸ் மற்றும் முகமது அமீர் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டனர். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இளம் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டே வெளிநாடுகளுக்குச் சென்று தொடர்புகளை விளையாடி வந்தது பாகிஸ்தான் அணி.
இன்னிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வாஹப் ரியாஸ் அளித்த பேட்டியில் பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புவதாக தெரிவித்தார். இதையொட்டி இங்கிலாந்துக்கு எதிரான 30 வீரர்களைக் கொண்ட பட்டியலில் வாஹப் ரியாஸ் பெயர் இடம்பெற்று இருந்தது.
கடந்த சில நாட்களாக நடந்து வரும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையேயான பயிற்சி போட்டியில் வஹாப் ரியாஸ் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதால் டெஸ்ட் போட்டிக்கான 20 வீரர்கள் கொண்ட அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திறமையான இளம் வீரர்களுடன் அனுபவமிக்க வீரரும் கை கோர்ப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.