ஐபிஎல் போட்டிக்கான விதிமுறைகள் அறிவிப்பு

இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிக்கான இறுதி விதிமுறைகளை 8 அணிகளின் நிர்வாகத்திடம் கொடுக்க உள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

பாதுகாக்கப்பட்ட பகுதி: ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்கள் வீரர்களுக்கு என தனி இடத்தை உருவாக்கிட வேண்டும். இந்தப் பாதுகாக்கப்பட்ட இடத்தில் உள்ள வீரர்கள் வெளியில் உள்ள நபர்களிடம் நேரடியாக பேச அனுமதி இல்லை. இதேப்போல் ஐபிஎல் நிர்வாக ஊழியர்கள் மற்றும் தொலைக்காட்சி நிர்வாகத்தினர் என அவர் அவர்களுக்கு தனித்தனியே பாதுகாக்கப்பட்ட பகுதி உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணம் மற்றும் செலவினங்கள்: வீரர்களுக்கு தேவையான பயண செலவுகள் மற்றும் தங்கும் செலவுகள் அனைத்தையும் அந்தந்த அணி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று வீரர்கள்: அணிகள் தங்களுக்குத் தேவையான அளவு வீரர்களை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கொண்டு செல்லலாம் என்றும் தேவைப்பட்டால் மாற்று வீரர்களையும் அழைத்து செல்லவும் அனுமதி அளிக்கப்படுகின்றது.

மருத்துவ பரிசோதனை: ஒவ்வொரு அணியும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வந்தவுடன் தங்கள் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் எங்கள் அணியின் வீரர்களின் உடல்நிலையில் சீரான இடைவெளியில் ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற பல விதிமுறைகளை ஒரு வாரத்திற்குள் ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat