இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் போட்டிகளில் தனது 500 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். மேலும் இச்சாதனையை படிக்கும் ஏழாவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் Brathwaite விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 500 ஆவது விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இதற்கு முன் இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த சாதனையை படைத்தார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டூவர்ட் பிராட்டின் தந்தை கிறிஸ் பிராட் போட்டி நடுவராக செயல்பட்டு வருகிறார். தன் கண் முன் தன் மகன் இவ்வளவு பெரிய சாதனை படைத்ததை கண்டு கிரஸ் பிராடட் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.