மான்செஸ்டர் யுனைடெட், செல்சி அணிகள் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு முன்னேறின

லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் செல்சி அணிகள் இந்த ஆண்டிற்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

நேற்று நடைபெற்ற பிரீமியர் லீக் தொடரின் கடைசி வார போட்டியில் லேசிஸ்டெர் சிட்டி அணிக்கு எதிரான போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மேலும் ஒல்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் செல்சி அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் செல்சி அணிகள் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு முன்னேறி ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் அடைந்த தோல்வி காரணமாக லேசிஸ்டெர் சிட்டி அணி ஐரோப்பா தொடரில் மட்டுமே பங்கேற்க இயலும்.

ரினோ வெர்னர் போன்ற சிறந்த வீரர்களை செல்சி அணி கையெழுத்திட்டு உள்ளதால் வரும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் செல்சி அணியின் கை ஓங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat