தொடர்ந்து ஒன்பதாவது முறையாக Serie A கோப்பையைக் கைப்பற்றியது ஜுவேண்டஸ் அணி

இத்தாலிய கால்பந்து லீக் தொடரான Serie A தொடரில் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஜுவான்டஸ் அணி சாதனை படைத்துள்ளது. நேற்று சம்ப்டோரியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஜுவான்டஸ் அணி 2 – 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்டர் மிலான் அணியை விட 7 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளதால் புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்த ஜுவான்டஸ் அணி இந்த ஆண்டிற்கான சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளது.

இதுகுறித்து பேட்டி அளித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்தக் கோப்பை கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட போராடும் தங்களது ரசிகர்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார். வரும் 30ஆம் தேதி நடக்க உள்ள கடைசி லீக் போட்டியில் ஜுவான்டஸ் அணிக்கு கோப்பை வழங்கும் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat