நான்காம் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது – Eng vs WI 3rd Test Day 4

இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணியும் இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நான்காம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

399 ரன்கள் எடுத்தால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஏற்கனவே கணித்தது போல நான்காம் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டது. மேலும் மழை தொடர்ந்ததால் நான்காம் நாள் ஆட்டம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.

ஐந்தாம் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்பு குறைவே என்று கூறப்படுவதால் இந்தப் போட்டியின் முடிவு தெரியவே வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat