அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான அணியை அறிவித்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் இடையேயான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியை வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். முற்றிலும் இளம் அணியாக அறிவிக்கப்பட்ட எந்த அணியில் பல்வேறு புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஐயன் மோர்கன் தலைமையிலான அணியில் ஜேசன் ராய், ஜோன்னி பைர்ஸ்ட்ரோ ஆகிய வீரர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளன. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற எந்த ஒரு வீரரும் இத்தொடரில் பங்கேற்கவில்லை.

உலகக் கோப்பை போட்டியில் கடைசி நேரத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்ட டேவிட் வில்லே அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து இடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் வரும் ஜூலை 30ஆம் தேதி தொடங்குகின்றது. கிரிக்கெட் உலக கோப்பை சூப்பர் லீக் தொடரின் முதல் தொடராகும் இது.

England Squad: Eoin Morgan (Middlesex) Captain, Moeen Ali(Worcestershire), Jonny Bairstow (Yorkshire), Tom Banton(Somerset), Sam Billings (Kent), Tom Curran(Surrey), Liam Dawson (Hampshire), Joe Denly (Kent), Saqib Mahmood (Lancashire), Adil Rashid (Yorkshire), Jason Roy (Surrey), Reece Topley (Surrey), James Vince (Hampshire), David Willey (Yorkshire)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat