வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி | Eng vs WI 3rd Test Day 3|

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 399 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி. மேலும் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 10/2 என்ற கணக்கில் நாளை நிறைவு செய்தது. (Eng vs WI 3rd Test Day 3)

Credits: ESPN Cricinfo

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 129 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆட்டம் தொடங்கிய முதலே விக்கெட்டுகள் சரிய தொடங்கின. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். (Eng vs WI 3rd Test Day 3)

இதையடுத்து மூன்றாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரொரி Burns மற்றும் டோமினிக் ஷிப்லி இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் குவித்தனர். இதையடுத்து டோமினிக் சிப்லி 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் வேகமாக ஆட இங்கிலாந்து அணி 226 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக இங்கிலாந்து அணியில் ரொரி Burns 90 ரன்களும் Joe Root 68 ரன்களும் குவித்தனர். இந்நிலையில் 399 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை தடுமாறி வருகின்றது.

மூன்றாம் நாள் ஆட்டநேர ஆய்வு

இங்கிலாந்து அணி

மூன்றாம் நாள் முழுவதும் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தியது இங்கிலாந்து அணி மட்டுமே. மூன்றாம் நாள் தொடக்கத்திலேயே மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட்டுகளை எடுத்ததுடன் மூன்றாவது இன்னிங்சில் நல்ல முன்னிலை பெற்றது வரை இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை தன் கைக்குள் வைத்தது. பல நாள் கழித்து ஜோ ரூட் மிகத் திறமையாகவும் வேகமாகவும் அணிக்கு ரன்களை குவித்தது அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஐ பொருத்தவரை முதலாவது டெஸ்ட் போட்டியில் தன்னை சேர்க்காதது எவ்வளவு பெரிய தவறு என்பதை தினமும் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றார்.(Eng vs WI 3rd Test Day 3)

மேற்கிந்திய தீவுகள் அணி

மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுத்தவரை முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றி தவிர வேறு எந்த ஒரு நல்ல விஷயமும் நடைபெறவில்லை. குறிப்பாக நாம் இரண்டாம் நாள் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டது போல கார்ன்வால்க்கு பதிலாக அல்ஜாரி ஜோசப்பை அணியில் தக்கவைத்து இருக்கலாம் என்றே தோன்றுகிறது.(Eng vs WI 3rd Test Day 3)

நான்காம் நாள் ஆட்டம் கணிப்பு

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஏற்கனவே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில் இன்றைய நாளில் அனைத்து விக்கெட்டுக்களையும் எடுக்கவே காத்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால் இன்றைய நாளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்த ஆட்டம் ஐந்தாம் நாள் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கூறலாம். இப்போட்டியில் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே மேற்கிந்திய தீவுகள் அணியால் இப்போட்டியயை சமன் செய்ய இயலும்.(Eng vs WI 3rd Test Day 3)

நேரம் : மாலை 3.30.

நேரலை தொலைக்காட்சி : Sony Six,  Sony Six HD

நடுவர்கள் : Richard Kettleborough, Michael Gough

வர்ணனையாளர்கள்: Nasser Hussain, M.Holding, Sir Alastair Cook, Ian Bishop.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat