மேற்கிந்திய தீவுகள் அணிகள் மீண்டும் தடுமாற்றம் – Eng vs WI 3rd Test Day 2 Analysis

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 232 ரன்கள் பின் நிலையில் 137 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முன்னதாக முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் 24ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்து வீசுவதாக தீர்மானித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 258 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் முதலே விக்கெட்டுகள் சரிய தொடங்கின. இறுதியில் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் டோம் பெஸ் கூட்டணி 76 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியை ஒரு நல்ல இடத்திற்கு கொண்டு சென்றது. இதை அடுத்து முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாட தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்கம் முதலே தடுமாறத் தொடங்கியது. இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 137 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இரண்டாம் நாள் ஆட்டம் ஆய்வு

இங்கிலாந்து அணி

இரண்டாம் நாள் ஆட்டம் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், பின் வந்த வீரர்கள் தங்கள் பங்கிற்கு ரன்களை அடித்தது இங்கிலாந்து அணிக்கு பெரும் பலமாக அமைந்தது. மேலும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பேட்டிங் செய்யும் பொழுது இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர்கள் மிகவும் கச்சிதமாக பந்துகளை வீச மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் மிகமோசமாக தடுமாறினார்கள்.

மேற்கிந்திய தீவுகள் அணி

நேற்றைய அறிக்கையில் நாம் கூறியது போல மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் நாளின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணி வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்தது அணிக்கு மிகவும் நன்றாகவே அமைந்தது. இருப்பினும் இத்தொடரில் இப்போட்டியில் மீண்டும் தங்களது பேட்டிங்கில் சொதப்புவது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஓரளவுக்கு நன்றாக மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் விளையாடி இருக்க வேண்டும். மேலும் சாய் ஹோப் போன்ற வீரர்கள் அனைத்து டெஸ்ட் போட்டியிலும் சொதப்புவது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பெரும் கவலையை ஏற்படுத்துகின்றது.

மூன்றாம் நாள் ஆட்டம் கணிப்பு

இங்கிலாந்து அணி

இன்றைய நாள் ஆட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆட்டம் தொடங்கிய ஒரு மணிநேரத்திற்குள் மேற்கிந்திய தீவுகள் அணியின் இன்னிங்சை முடித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இங்கிலாந்து அணி. மேலும் Follow – On முறையை பின்பற்றி மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களை ஆட செய்து இன்னிங்ஸ் வெற்றியை கைப்பற்றுவதற்கு இங்கிலாந்து அணி முனைப்பாக இருக்கும்.

மேற்கிந்திய தீவுகள் அணி

இன்றைய நாளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இன்று எந்த ஒரு விக்கெட்டுகளையும் இழக்காமல் விளையாடினாள் இந்த டெஸ்ட் போட்டியை டிரா செய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளது.

நேரம் : மாலை 3.30.

நேரலை தொலைக்காட்சி : Sony Six,  Sony Six HD

நடுவர்கள் : Richard Kettleborough, Michael Gough

வர்ணனையாளர்கள்: Nasser Hussain, M.Holding, Sir Alastair Cook, Ian Bishop.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat