பட்லர் மற்றும் போப் நிதான ஆட்டம் – Eng vs WI 3rd Test Day 1

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 258 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.(Eng vs WI 3rd Test Day 1)

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் 1 – 1 என்ற கணக்கில் சமனில் உள்ளன. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்ச தீர்மானித்தார். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் சிப்லே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி தடுமாற தொடங்கியது. எனினும் பொறுப்புடன் ஆடிய ரொரி Burns தனது ஏழாவது அரை சதத்தை கடந்தார். தொடர்ந்து இரண்டாவது முறையாக ரன் அவுட்டான Joe Root
17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 20 ரன்களுக்கு ஆட்டம் இழக்க இங்கிலாந்து அணி 122 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இன்னிலையில் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் மற்றும் Pope கூட்டணி பொறுமையுடன் விளையாடி இங்கிலாந்து அணிக்கு ரன்களை குவித்து வந்தது. இந்நிலையில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 258 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகின்றது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 56 ரன்களுடனும் Pope 91 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.(Eng vs WI 3rd Test Day 1)

முதல் நாள் ஆட்டம் அலசல்

இங்கிலாந்து அணி

ஆட்டத்தின் தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்தாலும் நாளின் கடைசி செஷன்னில் விக்கெட்டுகளை இழக்காமல் ஆடியது இங்கிலாந்து அணியை போட்டியில் ஒரு நல்ல இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் இழக்கும்போது மளமளவென விக்கெட்டுகள் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்லர் மட்டும் பாப் இருவரின் நிதான ஆட்டம் ஆட்டத்தின் போக்கை மாற்றியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ரன் அவுட் கேப்டன் ஜோ ரூட், தனது தவறை சீக்கிரம் ஆராய்வது நல்லது.(Eng vs WI 3rd Test Day 1)

மேற்கிந்திய தீவுகள் அணிகள்

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை என்றே கூறலாம். பல்வேறு நல்ல பந்துகளை வீசியும் தேவையான விக்கெட்டுகள் கிடைக்காதது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சற்று சோதனையே தந்தது. மேலும் இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழல் பந்து வீச்சாளரான Cornwall அவர்களை அணியில் சேர்த்தது. அவருக்கு பதில் அல்ஜாரி ஜோசப் அணியில் தொடர்ந்து இருக்கலாம் என்றும் தோன்றுகின்றது.(Eng vs WI 3rd Test Day 1)

2  ஆம் நாள் ஆட்டம் கணிப்பு

இங்கிலாந்து அணி

ஏற்கனவே நல்ல நிலையில் இருக்கும் இங்கிலாந்து அணி இதே நிலையே தொடர்ந்து 400 ரன்களுக்கு மேல் முதல் இன்னிங்சில் அடித்தால் இப்போட்டியில் எளிதில் வெல்ல இயலும். ஆட்டத்தின் தொடக்கத்தில் பட்லர் அல்லது போப் ஆகியோரில் ஒருவர் விக்கெட்டுகளை இழந்தாலும் அடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் தங்கள் தரப்பில் ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.(Eng vs WI 3rd Test Day 1)

மேற்கிந்திய தீவுகள் அணி

இரண்டாவது நாளின் முதல் மணி நேரத்திலேயே இங்கிலாந்து அணியின் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றுவது மிகவும் முக்கியமாகும். சுழல் பந்துவீச்சாளர்களை அதிகம் பயன்படுத்தாமல் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டே தொடர்ந்து பந்து வீசினால் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளது.(Eng vs WI 3rd Test Day 1)

நேரம் : மாலை 3.30.

நேரலை தொலைக்காட்சி : Sony Six,  Sony Six HD

நடுவர்கள் : Richard Kettleborough, Michael Gough

வர்ணனையாளர்கள்: Nasser Hussain, M.Holding, Sir Alastair Cook, Ian Bishop. (Eng vs WI 3rd Test Day 1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat