ஜேசன் ஹோல்டர்ஆ ஜோ ரூட்ஆ – மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் – ஒரு அலசல்|ENG vs WI 3rd Test Preview|

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகின்றது. மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளன.

முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறந்த ஆட்டத்தால் வெற்றியை பெற்று தொடரை சமன் செய்தது. இருப்பினும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிகள் வெற்றிக்காக உழைத்தாலும் அவர்களுக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றி சாதனை படைக்க வேண்டும் என்ற முனைப்பின் மேற்கிந்திய தீவுகள்  உள்ளது. இங்கிலாந்து அணியை பொறுத்தவரை இப் போட்டியை வென்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. |ENG vs WI 3rd Test Preview|

அணி விவரம்:

இங்கிலாந்து அணி:

கடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விதிமுறைகளை மீறியதாக சோப்ரா ஆச்சர் நீக்கப்பட்டார். இந்நிலையில் தன் தவறை ஒத்துக் கொண்டதால் அவருக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் மார்க் வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவர்களும் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளனர். இங்கிலாந்து அணியை பொறுத்தவரை மிடில் ஆடர் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க தவறுவது அணிக்கு பெரும் பின்னடைவை தருகின்றது. குறிப்பாக ஜோஸ் பட்லர் மற்றும் பாப் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழப்பது அணியை தோல்விக்கு வித்திட வாய்ப்புள்ளது. மேலும் சிப்லே, ஸ்டோக்ஸ், ரூட் ஆகியோரை தவிர மற்றவர்களும் ரன்கள் குவிப்பது கட்டாயமாகிறது. பந்துவீச்சை பொறுத்தவரை அனைத்து வீரர்களும் நன்றாகவே பந்து வீசுவதால், யாரை மூன்றாவது போட்டியில் விளையாட வைப்பது என்று ஜோ ரூட்க்கு பெரும் தலைவலியாக இருக்கும். |ENG vs WI 3rd Test Preview|

Squad : Rory Burns, Dominic Sibley, Zak Crawley, Joe Root(c), Ben Stokes, Ollie Pope, Jos Buttler(w), Dominic Bess, Jofra Archer, Stuart Broad, James Anderson, Chris Woakes, Sam Curran, Mark Wood

மேற்கிந்திய தீவுகள் அணி:

முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடினாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சில தவறுகளால் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் தோல்வியை தழுவியது. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அணியில் சில மாற்றங்களை கொண்டுவர ஜேசன் ஹோல்டர் திட்டமிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜான் காம்ப்பெல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழப்பதால் அணிக்கு பெரும் பின்னடைவை தருகின்றது. அணியில் பல வீரர்களும் சீராக விளையாடாததால் அணியின் வெற்றி கேள்விக்குறியாகவே உள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரை புது பந்தில் நன்றாக வீசும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள், 20 – 30 ஓவர் கழித்து பந்துகளை சரியாக வீசாதது எதிரணியின் ரன்களை மளமளவென உயர செய்கின்றது.எனவே  இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். |ENG vs WI 3rd Test Preview|

Squad: Kraigg Brathwaite, John Campbell, Shai Hope, Shamarh Brooks, Roston Chase, Jermaine Blackwood, Shane Dowrich(w), Jason Holder(c), Kemar Roach, Alzarri Joseph, Shannon Gabriel, Nkrumah Bonner, Rahkeem Cornwall, Raymon Reifer, Chemar Holder

வானிலை மற்றும் மைதானம்:

இந்த டெஸ்ட் போட்டியில் நான்கு நாட்களுக்கு மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மைதானம் கடந்த டெஸ்ட் போட்டியில் பயன்பட்டு உள்ளதால், பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இருவருக்கும் சாதகமாகவே இப்போட்டி அமைய வாய்ப்புள்ளது.  |ENG vs WI 3rd Test Preview|

டாஸ்:

இப்போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யவே வாய்ப்பு உள்ளது.

நேரம் : மாலை 3.30.

நேரலை தொலைக்காட்சி : Sony Six,  Sony Six HD

நடுவர்கள் : Richard Kettleborough, Michael Gough

வர்ணனையாளர்கள்: Nasser Hussain, M.Holding, Sir Alastair Cook, Ian Bishop. |ENG vs WI 3rd Test Preview|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat