இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளின் தேதி அறிவிக்கப்பட்டது|IPL Date Announced|

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் படேல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள தகவலில் அனைத்து அணி நிர்வாகத்திடம் கலந்து ஆலோசித்து, வரும் செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் இதற்கான அனுமதியைப் பெற இந்திய அரசாங்கத்திடம் முறையிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் அனுமதி அளித்தவுடன் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐபிஎல் போட்டிகள் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா நகரங்களில் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat