Anfield மைதானத்தில் நேற்று நடந்த 37வது வார போட்டியில் லிவர்பூல் அணி 5-3 என்ற கணக்கில் செல்சி அணியை வீழ்த்தியது. ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை வென்ற லிவர்பூல் அணி முதல் நான்கு இடத்தை தக்க வைக்க போராடும் செல்சி அணியை எதிர்கொண்டது. (Premier League)
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே லிவர்பூல் அணி வீரர்கள் போட்டியில் ஆதிக்கம் செலுத்தினர். முதல்பாதி இறுதியில் லிவர்பூல் அணி 3 – 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. Naby Keita, Alexander Arnold மற்றும் Georginio ஆகியோர் லிவர்பூல் அணிக்காக முதல்பாதியில் கோல்களை அடித்தனர். (Premier League)
இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய லிவர்பூல் அணி ஆட்ட நேர முடிவில் 5 – 3 என்ற கணக்கில் செல்சி அணியை வீழ்த்தியது. Firmino மற்றும் Oxaoate ஆகியோர் லிவர்பூல் அணிக்காக இரண்டாம்பாதியில் கோல்களை அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் லிவர்பூல் அணி 96 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. (Premier League)
மேலும் லிவர்பூல் அணியின் சொந்த மைதானத்தில் நடக்கும் கடைசி போட்டி என்பதால் இந்த ஆண்டிற்கான சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது. கோப்பையை பெற்று கருத்து தெரிவித்த லிவர்பூல் அணியின் பயிற்சியாளர் Klopp, இந்த கோப்பையை தங்களது ரசிகர்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.(Premier League)