சின்ன தவறுக்கு ஏன் என்னை துன்புறுத்துகிறீர்கள் – ஜோஃப்ரா ஆர்ச்சர் வேதனை |Jofra Archer|

ஒரு சிறிய தவறுக்காக ஏன் என்னை அனைவரும் மனதளவில் துன்புறுத்தாதீர்கள் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வேதனை தெரிவித்துள்ளார். (Jofra Archer)

டெய்லி மெயில் வலைதளத்திற்கு எழுதியுள்ள அறிக்கையில் “ இந்த வாரம் முழுவதும் மிகவும் மோசமாக சென்றதாகவும், இந்த ஐந்து நாட்களில் தன்னைப் பற்றி யோசிக்க நேரம் கிடைத்ததாகவும், இந்த 5 நாட்கள் முடிந்து பயிற்சிக்காக வெளியே வந்தபொழுது நான் ஏதோ பெரும் குற்றம் செய்தது போல் என்னை அனைவரும் பார்த்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.  (Jofra Archer)

மேலும் நான் தனிமைப்பட்டு இருந்த ஐந்து நாட்களில் எனது வலைதளத்தில் நான் செய்த தவறுக்கு என்னை நிறவெறி கொடுமைக்கு உள்ளாகினர் எனவும் தெரிவித்துள்ளார். என்னை பற்றி தவறாக கூறுபவர்களை நான் நீக்கினாலும் இந்த விஷயங்கள் எனது மனதில் இருந்து நீங்க மறுப்பதாக சோப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.  (Jofra Archer)

நான் சவுத்தாம்ப்டன்லிருந்து நேரடியாக மான்செஸ்டர் செல்லாதது தவறுதான், ஆனால் அது பெரும் குற்றம் இல்லை, அனைவரும் அவர்களது வாழ்வில் ஏதோ ஒரு தவறு செய்திருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்த மோசமான நாட்களில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் இருவரும் தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினர் எனவும்  மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மனதை ஒரு நிலைப்படுத்தி விளையாட உள்ளதாகவும் ஜோஃப்ரா ஆர்ச்சர் எழுதியுள்ளார்.   (Jofra Archer)

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன் ஜோஃப்ரா ஆர்ச்சர் விதிமுறைகளை மீறியதாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். மீண்டும் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தி 2 கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அவருக்கு எடுக்கப்பட்ட இரண்டு கொரோனா பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  (Jofra Archer)

இச்செய்தியின் முழு விவரத்தை அறிய  click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat