இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான டி20 போட்டியில் இணைவதாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் தெரிவித்துள்ளார். (Mohammed Amir)
கடந்த மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் முகமது அமீரின் மனைவி குழந்தை பெற்றெடுக்க உள்ளதால் அவரால் தொடரில் பங்கேற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. (Mohammed Amir)
இந்நிலையில் கடந்த வாரம் அமீரின் மனைவி குழந்தையை பெற்றெடுத்ததால் தான் இங்கிலாந்து தொடருக்கு இணைய விரும்புவதாக முகமது அமீர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் அறிவித்துள்ளார். இந்நிலையில் அவரது அழைப்பை ஏற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முகமது அமீருக்கு இரண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளது. (Mohammed Amir)
இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல வேண்டுமெனில் இரண்டு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதில் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட வேண்டும். இந்நிலையில் அமீருக்கு முதல் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து லாகூருக்கு செல்லும் அமீர் அங்கு மீண்டும் ஒரு கொரோன பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டவுடன் இங்கிலாந்திற்கு பயணம் செய்வார். (Mohammed Amir)
முன்னதாக பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள Haris Rauf இன்னும் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடாததால் அவருக்கு பதிலாக முகமது அமீர் அணியில் இணைவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் தனது குடும்பத்தினருடன் இருக்கும் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் சோயப் மாலிக், இந்தியாவில் விமானப் போக்குவரத்து தொடங்கியவுடன் இங்கிலாந்து வந்தடைவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.(Mohammed Amir)
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது. (Mohammed Amir)