ENG vs WI 2nd Test: இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வென்று மூன்று போட்டிகளை கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. (ENG vs WI 2nd Test)

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 37 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. மீண்டும் ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே மிக வேகமாக ரன்களை குவிக்க தொடங்கியது. இங்கிலாந்து அணி 129 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மூன்றாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 78 ரன்கள் குவித்தார். (ENG vs WI 2nd Test)

311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி மேற்கிந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தொடங்கினர். இருப்பினும் பிளாகவுட் மற்றும் Brooks போட்டியை சமன் செய்ய முயற்சித்தாலும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்து வீச்சின் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணி 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்து வீசுவதாக தீர்மானித்தார். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 469 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இரண்டாவது இன்னிங்சை ஆடத் தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. (ENG vs WI 2nd Test)

இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 24ஆம் தேதி மான்செஸ்டரில் நடக்க உள்ளது. (ENG vs WI 2nd Test)

Full Scorecard:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat