இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் பேட்டிங் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். (Ben Stokes)
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் முதல் இன்னிங்சில் சதம் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் விளாசினார். இந்நிலையில் ஐசிசி தனது புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் பேட்டிங் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருந்த அவர் 827 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி உள்ளார். (Ben Stokes)
டெஸ்ட் போட்டியின் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலும் பவுலிங் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேட் கம்மின்ஸ் முதல் இடத்திலும் உள்ளனர். (Ben Stokes)