வருடாவருடம் தரப்படும் உலக தலைச்சிறந்த கால்பந்து வீரருக்கான Ballon d’or பரிசு இந்த ஆண்டு வழங்கப்படாது என்று சர்வதேச கால்பந்து வாரியம் அறிவித்துள்ளது. (Ballon D’or)
அந்த வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கால்பந்து போட்டிகள் தடைப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டிற்கான Ballon d’,or விருது இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கால்பந்து ரசிகர்கள் இடையே மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. (Ballon D’or)
ஆண்டுதோறும் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இருவருமே மாற்றி மாற்றி இவ்விருதை வாங்குவது வழக்கம், ஆனால் இந்த ஆண்டு FC Bayern Munchen அணியை சேர்ந்த ராபர்ட் லேவண்டோஸ்கி இக்கோப்பையை வெல்வார் என்று கால்பந்து ரசிகர்கள் கணித்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு விருது ரத்து செய்யப்பட்டுள்ளதால் ராபர்ட் லேவண்டோஸ்கி ரசிகர்கள் கவலையில் உள்ளனர். (Ballon D’or)