ஏன் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவேண்டும் – ஒரு அலசல் (IPL 2020)

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கி நவம்பர் ஏழாம் தேதி நிறைவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. (IPL 2020)

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற வாய்ப்பு குறைவாக உள்ளதால் ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடித்துவிட இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.(IPL 2020)

முதலில் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அனைத்து அணி வீரர்களை ஒருங்கிணைத்து இந்தியாவில் ஒரே இடத்தில் பயிற்சி அளிப்பது இயலாத காரியம் என்றும் கூறப்படுகின்றது. மேலும் இந்தியாவில் பார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றாலும் ரசிகர்கள் மைதானத்திற்கு முன் வந்து நிற்க வாய்ப்புள்ளது என்றும் இது பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும் என்றும் கருதப்படுகின்றது. (IPL 2020)

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் போட்டிகளை துபாய், அபுதாபி மற்றும் சார்ஜா ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஐபிஎல் தேவையான அனைத்து உதவிகளையும் ஐக்கிய அரபு அமீரகம் அரசாங்கத்திடம் பெற்று தருவதாகவும் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் வாக்களித்துள்ளது. (IPL 2020)

மேலும் மற்ற நாடுகளுடன் பார்க்கும் பொழுது ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைவாகவே உள்ளது. எனினும் மற்ற நாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வெளிநாட்டு வீரர்களுக்கு அவர்கள் சொந்த நாட்டில் அனுமதி கிடைத்தால் மட்டுமே அவர்களால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க இயலும். எனவே கூடிய விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. (IPL 2020)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat